Firefox for Android (ta)

Title — 26 characters

அதிவேக அந்தரங்க இணைய உலாவி

What’s new — 271 characters

ஒவ்வொரு புதிய வெளியீட்டிலும் Firefox for Android உலாவியை இன்னும் சிறப்பாக்க முயற்சிக்கிறோம். புதிய அம்சங்கள், சரிசெய்யப்பட்ட வழுக்கள், மற்றும் செயல்திறன் மேம்படுத்தல்கள பற்றி அறிய வெளியீட்டுக் குறிப்புகளைப் படியுங்கள் https://www.mozilla.org/en-US/firefox/android/notes/.

Short Description — 79 characters

அந்தரங்கமாக, கருவிகளில் ஒத்திசைக்க, விருப்பமைக்க இலவச கைப்பேசி உலாவியைப் பெறுக.

Description — 3442 characters

தனிப்பட்ட திறன்மிக்க அதிவேக இணையத்தையும் அனுபவியுங்கள். தனித்துவம் வாய்ந்த உலக மக்களின் முதன்மை பயர்பாக்ஸ் உலாவி மொசில்லாவால் உருவாக்கப்பட்டது, மேலும் தனியுரிமைக்கு பெயர்பெற்ற இணைய நிறுவனம் ஆகும். இன்றே மேம்படுத்தி பயர்பாக்சை சார்ந்திருக்கும் நூறாயிரம் மக்களுடன் சேர்ந்து கூடுதல் உலாவல் அனுபவத்தைப் பெறுக.

வேகமானது. திறன்மிக்கது. உங்களுடையது.
பயர்பாஃசு உங்களின் இணைய அனுபவத்தை உங்கள் கட்டுப்பாட்டில் எடுக்கத் தேவையான ஆற்றலைத் தருவதுடன் உங்கள் மனதையும் கொள்ளைக் கொள்கிறது.
அதனால் தான் நாங்கள் வடிவமைக்கும் புத்திசாலி வசதிகள் உலாவலில் இருந்து கற்பனைகளை எடுத்துவிடுகிறது.

புத்திசாலித்தனமாகத் தேடுங்கள் & மிகவேகமாகப் பெற்றிடுங்கள்
- ஒவ்வொரு கணமும். உங்களின் தேவைகளை எதிர்நோக்கி உள்ளுணர்வுடன் செயற்பட்டு இதற்கு முன்னர் நீங்கள் விரும்பிய தேடுபொறியில் தேடிக் கிடைத்த முடிவுகளையும் ஒன்றிற்கும் மேற்பட்ட பரிந்துரைகளையும் வழங்குகிறது.
- விக்கிப்பீடியா, கீச்சு மற்றும் அமேசான் தேடல் வழங்குநர்களை குறுக்குவழியாக எளிதில் அணுகலாம்.

அடுத்த மட்ட தனியுரிமை
- உங்களின் தனியுரிமை புதுப்பிக்கப்பட்டது. தடமறி பாதுகாப்புடன் கூடிய அந்தரங்க உலாவல் இணைய பக்கத்தின் சில பகுதிகளைத் தடுப்பதுடன் உங்களின் உலாவல் வரலாற்றைத் தடமறியலாம்.

உங்கள் கருவிகளுக்கிடையே பயர்பாசை ஒத்திசை
- ஒரு பயர்பாஃசு கணக்ககைக் கொண்டு உங்கள் வரலாற்றை புத்ததக்குறிகளை திறந்த கீற்றுகளை உங்களின் மேசைக்கணினிலும் திறன்பெசிலும் கைப்பலகையிலும் அணுகலாம்.
- உங்களின் அனைத்து சாதனங்களும் கடவுச்சொற்களை நினைவில் நிறுத்துவதால் நீங்கள் நினைவுக்கூறத் தேவையில்லை.

உள்ளுணுர்வுடன் கூடிய கீற்றுக் காட்சி
- எதிர்கால குறிப்புக்களில் உள்ளடக்கங்களை எளிதில் காண்டுபிடிக்க உள்ளுணர்வுமிக்க காட்சியும் எண்ணிடப்பட்ட கீற்றுகளும் உதவுகிறது.
- திறந்துள்ள வலைப்பக்கங்களைத் தொலைக்காமல் கீற்றுகளை பல எண்ணிகையில் திறக்கவும்.

உங்களின் முக்கிய தளங்களை எளிதல் அணுகுங்கள்
- உங்களின் பொன்னான நேரத்தை விரும்பிய பக்கங்களைத் தேடுவதை விடுத்து அவற்றை வாசிப்பதில் செலவிடவும்.

அனைத்திற்கும் துணை நிரல்கள்
- விளம்பர தடுப்பி, கடவுச்சொல் மற்றும் பதிவிறக்க நிர்வாகி போன்ற பல துணைநிரல்களைக் கொண்டு பயர்பாஃசை விரும்பியவாரு அமைத்து உங்களின் வலை அனுபவத்தை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

விரைவாக பகிர
- நீங்கள் அண்மையில் பயன்படுத்திய முகநூல், கீச்சிர், புலனம், காயலை போன்ற செயலிகளை நினைவில் வைத்து அவற்றுடன் எளிதில் உள்ளடக்கத்தைப் பகிர உதவுகிறது.

இதைப் பெரிய திரைக்கு எடுத்துச் செல்
- தடமேற்றும் திறன்களைக் கொண்ட தோலைக்காட்சியிலிருந்து, பலகைக் கணினியிலிருந்து (அ) திறன்பேசியிலிருந்து காணொளியையும் வலை உள்ளடக்கத்தையும் அனுப்புங்கள்.

ஆண்ட்ராய்டிற்கான பயர்பாக்சைப் பற்றி மேலும் அறிக:
- கேள்விகள் இருப்பின் (அ) உதவி வேண்டுமாயின்? https://support.mozilla.org/mobile பக்கத்தைப் பார்க்கவும்
- பயர்பாஃசு செயலிக்கான அனுமதிகள்: https://mzl.la/Permissions
- மொசில்லாவில் என்ன நடக்கிறது என்பதுப் பற்றி கூடுதலாக அறிய: https://blog.mozilla.org
- முகநூல் பக்கத்தில் பயர்பாஃசை விரும்ப: https://mzl.la/FXFacebook
- பயர்பாக்சை https://mzl.la/FXTwitter: கீச்சில் பின்தொடரவும்

மொசில்லா பற்றி
மொசில்லா இருப்பதே இணையத்தை பொதுவளமாக உருவாக்கி அனைவருக்கும் கிடைக்கச் செய்கிறோம் ஏனேன்றால் நங்கள் கட்டற்ற திறவூற்று கோட்பாடுகளை நம்புவதுடன் மூடிய கட்டுப்பாடுள்ளவைகளைக் காட்டிவிலும் சிறந்தாக எண்ணுகிறோம். பயர்பாஃசு போன்ற தயாரிப்புகளை உருவாக்கி மக்களுக்கு தகுந்த முன்னுரிமைகளையும் வெளிப்படைத்தன்மையும் வழங்குவதுடன் அவர்களின் இணைய வாழ்வில் கூடுதல் கட்டுப்பாட்டைத் தருகிறது. கூடுதலாக அறிய https://www.mozilla.org தளத்தைப் பார்க்கவும்

தனியுரிமை கொள்கை: https://www.mozilla.org/legal/privacy/firefox.html

Google Play Screenshots Copy

வேகமானது. திறன்மிக்கது. உங்களுடையது.
பயர்பாக்சிற்கு மேம்படுத்தி 
நூறாயிரம் பயனர்களுடன் சேருங்கள்
உள்ளுணர்வு காட்சியுடன் கூடிய கீற்று வடிவமைப்பு உங்களின் திறந்த கீற்றுகளை
விரைவாகக் கண்டுபிடித்து நிர்வகிக்கவும்
அறிவார்ந்த தேடல்கள் நீங்கள் தட்டும் முன்பே சரியாக
கணிக்கக்கூடிய முடிவுகளைப் பெறுங்கள்
ஒத்திசைவுடன் தடையற்ற
உலாவல்
பயர்பாஃசு பாவிக்கும் அனைத்து இடங்களிலிருந்தும்
உங்களின் புத்தகக்குறிகளை, வரலாறை, திறந்த கீற்றுகளை,
கடவுச்சொற்களை உடனக்குடன் அணுகுங்கள்
அடுத்து மட்ட தனியுரிமை தடுமறி பாதுகாப்புடன் கூடிய அந்தரங்க உலாவலில்
வலைப்பக்கங்களின் ஒரு அங்கத்தைத் தடுப்பதுடன்
உங்களின் உலாவல் நடவடிக்கையை அறியலாம்.
அனைத்திற்கும் துணை நிரல்கள் உங்கள் உலாவியில் துணை நிரல்களான
விளம்பர தடுப்ப்பி விறக்க மேலாளர்கள்
போன்றவற்றைக் கொண்டு விருப்பமை.
விரைவு பகிர்வு பயர்பாக்ஸ் நினைவிலிருந்து அண்மையில்
பயன்படுத்திய செயல்களின் மூலம்
உங்களுக்கு வேண்டிய வார்த்தையை காண வழியமைக்கிறது
சாதனத்திற்கு அனுப்பு உங்கள் திறன்பேசி (அ) கைக்கணினியிலிருந்து
ஆதரிக்கப்படும் எந்தச் சாதனங்களுக்குக்
காணொளியையும் வலை உள்ளடக்கத்தையும் அனுப்பு